விழுப்புரத்தில் 27-ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் :

விழுப்புரத்தில் 27-ம் தேதி  மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் :
Updated on
1 min read

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் இணைந்து வருகிற 27-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4வரை விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கலை கல்லூரி வளாகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாம் தொடர்பாக மேலும் விவரங்களை அறிய, ஊரக பகுதிகளில் வட்டார இயக்க மேலாண் அலுவலகம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு(PLF), நகராட்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரம் அறிய 04146-223736, 94440 94475 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in