

புதுச்சேரியில் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர் சடலம் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் உதவியுடன் மீட்கப்பட்டது.
புதுச்சேரி வடுக்குப்பம் மலட்டாறில் உதயகுமார் (24) என்பவர் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். பட்டதாரி இளைஞரான அவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். திடீர் வெள்ளப்பெருக்கில் அவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து அவரது சகோதரர் ரங்கபாஷ்யம் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார், வருவாய் துறையினர், மற்றும் தீயணைப்பு படையினர் தீவிரமாக தேடினர். கூடுதலாக ஆழ்கடல் நீச்சல் வீரர்களும் தேடுதலில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு அவரது உடலை கண்டு எடுத்தனர்.
சுமார் 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு அவரது உடலை கண்டு எடுத்தனர்.