

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் மரியதாஸ். தனது மனைவி ஆரோக்கியமேரியுடன் திண்டுக்கல் சென்று விட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வத்தலகுண்டு புறவழிச் சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது சாலை யோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியது.
இந்த விபத்தில் கார் ஓட்டுநர் காஜாமைதீன் (38), மரியதாஸ் (55) ஆகியோர் உயிரிழந்தனர். ஆரோக்கியமேரி (50) படுகாயத்துடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.