

சேலம்: சேலம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியும், வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து வருகிறது. இந்நிலையில்,, மாநகர பகுதியில் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் தலைமையிலான அலுவலர்களும், மாவட்ட பகுதியில் ஆட்சியர் கார்மேகம் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் மழை பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணைந்து மழை மற்றும் வெள்ளம் பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மோசமான வானிலை காரணமாக உயிரிழப்பும் ஏற்படாத வகையில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் கார்மேகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழு அமைத்து, மழை பாதிப்பு பகுதிகளில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தும், பாதுகாப்பான இடங்களுக்கு அவர்களை அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.