போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது  :

போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது :

Published on

அசாம் மாநிலம் மங்கட்டாய் மாவட்டத்தைச் சேர்ந்த முனாப் அலி மகன் அலிமுதீன் (25). இவர் கோவில்பட்டியில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் அலிமுதீனை, கோவில்பட்டி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாககுமாரி கைது செய்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in