சிப்காட்டில் மரக்கன்று : நடும் திட்டம் தொடக்கம் :

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அணுகு சாலையில் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் ஆர்.காந்தி. அருகில், ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அணுகு சாலையில் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் ஆர்.காந்தி. அருகில், ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

சிப்காட் பெல் அணுகு சாலையில் 300 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் 2,500 மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், சிப்காட் பெல் அணுகு சாலையில் 300 மரக்கன்றுகள் நடும் திட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க 1,000 மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியரிடம் வினோத் காந்தி ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நெடுஞ் சாலைத் துறை கோட்ட பொறியாளர் லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in