சேலம் மாநகராட்சி பகுதியில்  709 வாக்குச்சாவடிகள் :

சேலம் மாநகராட்சி பகுதியில் 709 வாக்குச்சாவடிகள் :

Published on

சேலம் மாநகராட்சியில் உள்ள 60 கோட்டங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 709 வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்து வதற்கான ஆயத்த பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. தேர்தலுக்காக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இதன்படி சேலம் மாநகராட்சியில் உள்ள 60 கோட்டங்களிலும் ஒவ்வொரு கோட்டத்திலும் 13 ஆயிரத்து 500 வாக்காளர்களை கொண்டு கோட்டம் மறுவரையறை செய்யப்பட்டன. இக்கோட்டங்களின் எல்லைப் பகுதியை கண்டறிந்து வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாநகராட்சி பகுதியில் 709 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in