

கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சி மேயர் பதவி பெண் களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது மறுசீராய்வு செய்து ஆண்களுக்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு திமுகவினரி டையே ஏற்பட்டுள்ளது. அப் படியில் லாவிட்டால் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு மேயர் சீட் பெற முக்கிய நிர்வாகிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
2020-ல் அதிமுக ஆட்சியின் போது மாநகராட்சித் தேர்தல் நடத்து வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அப்போது மதுரை மாநகராட்சி மேயர் பதவி, பெண்கள் போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தேர்தல் நடத்தப்படுவது தள்ளிப் போனது.
அதன் பின் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், சமீபத்தில் எஞ் சிய பகுதிகளில் ஊரக உள் ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக் கப்பட்டது. இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் மொத் தம் 100 வார்டுகள் உள்ளன. இதற்கு முன்பு கவுன்சிலர் பதவிகளில் 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. விரைவில் நடைபெற உள்ள மாந கராட்சி தேர்தலில் 50 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் பெண்கள் போட்டியிட உள்ளனர்.
மதுரை மாநகராட்சியை பொறுத்தவரையில் மேயர் பதவி பெண்கள் போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அதை மறுசீராய்வு செய்து ஆண்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக் கும்படி திமுக மேலிடத்திடம் மதுரை மாவட்ட கட்சியினர் வலி யுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து திமுகவினர் கூறி யதாவது: மதுரை மாநகர திமுகவில் வடக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் பொன்முத்து ராமலிங்கமும், தெற்கு மாவட்டச் செயலாளராக கோ.தளபதியும் உள் ளனர்.
தற்போது கோ.தளபதி எம்எல் ஏவாக மட்டும் இருப்பதால் அவர் தனது குடும்பத்தினருக்கோ அல் லது ஆதரவாளருக்கோ மேயர் சீட் கேட்க வாய்ப்புள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மாநகராட்சி தேர்தல் நடத்த திட்டமிடப் பட்டிருந்தபோது, கோ.தளபதி தனது மகளுக்கு சீட் கேட்டிருந்தார். அதனால், அவர் இந்த முறை மகளுக்கு மேயர் சீட் கேட்க அதிக வாய்ப்புள்ளது.
முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் கட்சியில் சீனி யர். இவர் தரப்பிலும், அவரது குடும் பத்தினருக்கு மேயர் சீட் கேட்க வாய்ப்புள்ளது.
இதேபோல், கட்சித் தலைமை யிடம் நெருக்கமாக இருக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகரா ஜனும் தனது ஆதரவாளரை பரிந்துரைக்க வாய்ப்புள்ளது. முக்கிய நிர்வாகிகள், அமைச்சர், எம்எல்ஏக்கள் தரப்பிலேயே தங்கள் ஆதரவாளர்களுக்கு மேயர் சீட் பெற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டாம் கட்ட நிர் வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் தங்களுக்கு மேயர் சீட் கிடைக்க வாய்ப்பில்லையோ என நினை த்து சோர்வடைந்துள்ளனர். ஆனாலும், சிலர் மனம் தளராமல் கட்சித் தலைமை அலுவலக நிர்வாகிகள், அதிகாரமிக்க வெளி மாவட்டங் களைச் சேர்ந்த அமைச்சர்கள் மூலம் மேயர் சீட்டுக்கு முயற்சித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிமுகவிலும் போட்டி
அதிமுக தரப்பில் மாநக ராட்சி தேர்தல் தொடர்பாக இன்னும் கட்சிப் பணியை வெளிப்படையாக தொடங்காமல் உள்ளனர். அக் கட்சியில் கடந்த சட்டப் பேர வைத் தேர்தலில் எம்எல்ஏ சீட் கிடைக்காதவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்கள் உள்ளூர் மாவட்டச் செயலாளர்கள் மேயர் சீட் பெற மறைமுகமாக முயற்சித்து வருகின்றனர். இதற்காக முக்கிய பிரமுகர்கள் பலர் இப்போதே ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர் செல்வம், கே.பழனிசாமி மூலம் மேயர் சீட் பெற சத் தமில்லாமல் காய் நகர்த்தி வரு கினறனர்.
மாநகராட்சி தேர்தல் அறி விக்கப்பட்டதும் மேயர் சீட் பெறுவதற்கான நடவடிக்கைகள் இக்கட்சிகளின் நிர்வாகிகளிடையே சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தற்போது பெண் களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மது ரை மேயர் பதவி, மறுசீராய்வு செய்து ஆண்களுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.