வேளாண் அறிவியல் நிலையத்தில் இலவச பயிற்சி :

வேளாண் அறிவியல் நிலையத்தில்  இலவச பயிற்சி :
Updated on
1 min read

மசாலா பொடிகள் தயாரித்தல் குறித்த 5 நாட்கள் இலவச பயிற்சி, மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நவ. 22-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் பயிற்சி வகுப்பு நவ.26 வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் குழம்பு மிளகாய்ப்பொடி, சாம்பார் பொடி, ரசப்பொடி, கரம் மசாலா, பிரியாணி மசாலா பொடி, சன்னா மசாலா பொடி, கறிவேப்பிலை இட்லி பொடி, முருங்கை கீரை பருப்பு பொடி தயாரிப்பு குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மேலும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் உரிமம் பெறுவது குறித்தும், சிறு, குறுந்தொழில் தொடங்குவது குறித்தும், வங்கியில் கடன் பெறுவது குறித்தும், சந்தைப் படுத்துவது குறித்தும் நிபு ணர்கள் விரிவான பயிற்சி அளிக்கின்றனர்.

இப்பயிற்சியில் விருப்பமுள்ள விவசாயிகள், மகளிர் குழுக்கள், தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங் களுக்கு மொபைல் எண் - 94980 21304.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in