ஐயப்ப பக்தர்களுக்கு ரங்கத்தில் சிறப்பு முகாம் :

ஐயப்ப பக்தர்களுக்கு  ரங்கத்தில் சிறப்பு முகாம்  :
Updated on
1 min read

அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் திருச்சி மாவட்டக் குழு சார்பில், சபரிமலை செல்லும் பக்தர்களுக்கான சிறப்பு முகாம் மற்றும் 11-ம் ஆண்டு அன்னதானம் தொடக்க விழா ரங்கம் அம்மாமண்டபம் சாலை கே.கே.எம்.மாமுண்டி கோனார் தோப்பில் நேற்று தொடங்கியது.

விழாவுக்கு சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் என்.ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட புரவலர் என்.வி.முரளி சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். அன்னதான முகாமை மாநிலத் தலைவர் என்.விஸ்வநாதன், மருத்துவ முகாமை கே.ஆர்.டி.வெங்கடேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்தநிகழ்வில், மாவட்டச் செயலாளர் எம்.தர், பொருளாளர் ஜெ.சுரேஷ், முகாம் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆர்.கிருஷ்ணன், முகாம் அலுவலர் சி.ஆர்.அம்சராம், கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த முகாம் 2022 ஜனவரி 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in