

மாவட்டம்தோறும் சூரிய மின்சக்திபூங்கா அமைக்கப்படும். முதல்கட்டமாக 4 ஆயிரம் மெகாவாட் திறனுள்ள சூரியசக்தி மின்நிலையம் அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, மாவட்டம்தோறும் சூரியசக்தி மின்சார பூங்காஅமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியை மின்வாரியம் மேற்கொண்டுள்ளது.
ஒரு மெகாவாட் சூரியசக்தி மின்நிலையம் அமைக்க குறைந்தபட்சம் 5 ஏக்கர் நிலம் தேவை. மாநகராட்சி, நகராட்சி இல்லாத மாவட்டங்களில் 75 முதல் 100 மெகாவாட் திறனில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, துணைமின் நிலையங்களுக்கு அருகில் உள்ள அரசு நிலங்களை கையப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்கும்.
முதலாவது பூங்கா திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.