மூதாட்டியிடம் நகை பறிப்பு :

மூதாட்டியிடம்  நகை பறிப்பு :
Updated on
1 min read

காஞ்சிபுரம் குமார் தெருவைச் சேர்ந்தவர் பச்சையம்மாள்(70). இவர், நேற்று மாலை டி.கே.நம்பி தெருவில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த இருவர், தங்களை போலீஸ்காரர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

மேலும், 'முதியவர்கள் நகைகளை அணிந்து சென்றால் திருடர்கள் பறித்துக் கொள்வார்கள்' என்று கூறியதுடன், ஒரு பையைக் கொடுத்து, நகைகளை அதில் போடுமாறு கூறியுள்ளனர்.

அதை நம்பிய பச்சையம்மாள், 3 பவுன் தங்கச் சங்கிலியை அதில் போட்டுள்ளார். பின்னர், பையை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பையில் நகை இல்லாதது தெரியவந்ததால், பச்சையம்மாள் இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி போலீஸில் புகார் செய்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in