தெற்கு மாவட்ட திமுக சார்பில் - தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் :

தே.கல்லுப்பட்டியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய தெற்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.மணிமாறன் உள்ளிட்டோர்.
தே.கல்லுப்பட்டியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய தெற்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.மணிமாறன் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் தே.கல்லுப்பட்டியில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு தே.கல்லுப்பட்டியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சலவைத் தொழிலாளர்களுக்கு 50 தேய்ப்புப் பெட்டிகள், அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், 3,000 சேலைகள் உள்ளிட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்களை மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.மணிமாறன் வழங்கினார்.

மேலும் கல்லுப்பட்டி கண்ணப்பநாயனார் கோயில் சுவாமிக்கு வெள்ளிக் கவசம் செய்வதற்கு ரூ.4 லட்சம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் டி.கல்லுப்பட்டி ஒன்றிய திமுக செயலாளர் ஞானசேகரன் மற்றும் நிர்வாகிகள் முத்துகணேசன், பாண்டி முருகன், ஏர்போர்ட் பாண்டியன், பொடா நாகராஜன், சிவனாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in