நெல் கொள்முதல் பணத்தை உடனடியாக வழங்க கோரி மனு :

நெல் கொள்முதல் பணத்தை உடனடியாக வழங்க கோரி மனு :
Updated on
1 min read

நெல் கொள்முதல் பணத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தினர் மனு அளித் தனர்.

அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன் தலைமையிலான விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

மதுரை மாவட்டத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குரிய தொகையை ஒரு மாதத்துக்கு மேலாகியும் வழங்கவில்லை.

இதனால் விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க முடியாமலும், மீண்டும் விவ சாயப் பணிகளை தொடங்க பணமின்றியும் சிரமப்படுகின் றனர்.

எனவே, நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்கான தொகை யை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை மாவட்டத்தில் தற் போது உரத்தட்டுப்பாடு நிலவு கிறது. இதைப் பயன்படுத்தி சில உர விற்பனை நிலையங்கள் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்கின்றனர்.

போதுமான அளவில் உரங் கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரி வித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in