விபத்து வழக்கில் : லாரி ஓட்டுநருக்கு சிறை தண்டனை :

விபத்து வழக்கில் : லாரி ஓட்டுநருக்கு சிறை தண்டனை :
Updated on
1 min read

திண்டுக்கல் முனிசிபல் கால னியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ரமீலா, மருமகள் சர்மிளா. மூவரும் 2012-ம் ஆண்டு காரில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந் தனர்.

சின்னாளபட்டி அருகே மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ் சாலையில் முருகம்பட்டி பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோதியதில் சரவணன், ரமீலா ஆகியோர் உயிரிழந்தனர். சர்மிளா படுகாயமடைந்தார். இந்த விபத்து குறித்து அம்பாத்துரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, எரியோடு அருகே சின்னழகநாயக்கனூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பரமசிவத்தை கைது செய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் ஜே.எம்.3 நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் லாரி ஓட்டுநர் பரமசிவத்துக்கு ஓராண்டு ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டணையும் ரூ.9,000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட் முல்லைவாணன் தீர்ப்பளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in