மக்கள் நீதி மய்யம் கட்சியின் மண்டல செயற்குழு கூட்டம் :

மக்கள் நீதி மய்யம் கட்சியின்   மண்டல செயற்குழு கூட்டம் :
Updated on
1 min read

மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி மண்டல செயற்குழு ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில துணைத் தலைவர் ஏ.ஜி.மவுரியா தலைமை வகித்தார். துணைத் தலைவர் கோவை ஆர்.தங்கவேலு முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் தென்மேற்கு மாவட்ட நற்பணி அணி அமைப்பாளர் தரும.சரவணன் வரவேற்றார்.

கூட்டத்தில், மாநிலச் செயலாளர் சிவ.இளங்கோ, மகளிர் அணி மாநிலச் செயலாளர் மூகாம்பிகை ரத்தினம், விவசாய அணி மாநிலச் செயலாளர் ஜி.மயில்சாமி, பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் எஸ்.வைத்தீஸ்வரன், மாணவர் அணி மாநிலச் செயலாளர் ராகேஷ்சம்ஷேர், மாவட்டச் செயலாளர்கள் எஸ்.சுரேஷ், சாம்சன், கல்யாணகுமார், ராஜகோபால், ரவிச்சந்திரன், அனாஸ், சாதிக், ஜெகன், ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில், மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.கண்ணன் நன்றி கூறினார்.

கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக அளவில் போட்டியிட்டு வெற்றிபெற பாடுபடுவது, கட்சியின் வளர்ச்சிக்கும் அனைவரும் களப்பணியாற்ற உறுதியேற்பது, காவிரி டெல்டா விவசாயிகள் 1,000 பேருக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான இயற்கை நுண்ணுயிர் உரங்களை இலவசமாக வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in