

நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கொல்லி மலை பகுதியில் பெய்யும் தொடர் மழையால் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில் அருகே உள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
இதனால் கொல்லி மலை நீர் வீழ்ச்சிகளுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதித்து மாவட்ட வனத்துறையினர் உத்தர விட்டுள்ளனர்.
மேலும், தொடர் மழை பெய்து வருவதால் மலைக்கு சுற்றுலா வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.