

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது.
பாளையங்கோட்டை உதவி ஆணையர் ஜஹாங்கிர் பாஷா, சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட குழுவினர், பாளையங்கோட்டை தெற்கு பஜாரிலுள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 30 கடைகளுக்கு தலா ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.