உத்திரகாவேரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 5 வயது சிறுவன் :

உத்திரகாவேரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 5 வயது சிறுவன் :
Updated on
1 min read

ஒடுக்கத்தூர் உத்திரகாவேரி ஆற்றில் வேடிக்கை பார்க்கச் சென்றுதண்ணீரில் அடித்துச்செல்லப் பட்ட சிறுவனை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் ஒடுக்கத்தூர் அருகேஉள்ள கெங்கசானிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவரின் மகன் ரித்திக்ரோஷன் (5).இவர், அங்குள்ள உத்திர காவேரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை பார்க்க பெற்றோருடன் நேற்று சென்றார். அப்போது, சிறுவன் ரித்திக் ரோஷன் திடீரென ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டார்.இதைப்பார்த்த பெற்றோர் மற்றும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி யடைந்து அவரை தேடினர்.

இதுகுறித்த தகவலின்பேரில், ஒடுக்கத்தூர் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். ஆனால், காட்டாற்று வெள்ளம் என்பதால் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு தேடியும் அவரை மீட்க முடியவில்லை. தொடர்ந்து, தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in