கால்நடைகளை சாலையில் திரியவிட்டால் வழக்கு : அபராதத் தொகையை உயர்த்தவும் திட்டம்

கால்நடைகளை சாலையில் திரியவிட்டால் வழக்கு :  அபராதத் தொகையை உயர்த்தவும் திட்டம்
Updated on
1 min read

போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகளை சாலைகளில் திரியவிடும், அவற்றின் உரிமையாளர்கள் மீது காவல்துறை மூலம் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாநகராட்சி ஆணையர் பா. விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் கால்நடை வளர்ப்போர் பலரும் அவற்றை முறையாக வீடுகளில் கட்டி வைத்து வளர்ப்பதில்லை. காலையில் பால் கறந்தபின் அவற்றை வெளியில் விடும் உரிமையாளர்கள் பின்னர் அதைப்பற்றி கண்டுகொள்வதே இல்லை. சாலைகள், தெருக்கள், பொது இடங்களில் திரியும் கால்நடைகளால், வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதுடன், விபத்துகளும் ஏற்படுகின்றன.

கடந்த வாரத்தில் மட்டும் மாநகரில் 80 கால்நடைகள் பிடிக்கப்பட்டு கோசாலையில் ஒப்படைக்கப்பட்டன. அவற்றுக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இனி, ரூ.10 ஆயிரம் வரை அபராத தொகையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக சாலைகளில் மாடுகளைத் திரியவிடும் உரிமையாளர்கள் மீது காவல்துறை மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in