வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் - மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டவேண்டாம் : மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் -  மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டவேண்டாம் :  மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டவேண்டாம் என திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பொதுமக்கள் மின்சார விபத்துகளில் இருந்து தங்களை பாது காத்துக்கொள்ள பாதுகாப்பு வழிமுறைகள் அறிவிக்கப்பட் டுள்ளது. அதன்படி, மழைக்காலம் என்பதால் மின்கம்பம் மற்றும் அவற்றை தாங்கும் மின்கம்பிகளில் கால்நடைகள், விளம்பர பலகைகளை கட்டக்கூடாது.

மின்கம்பிகள் அருகே செல்லக்கூடாது

மின்கம்பிகள் அறுந்து கிடந்ததால் சற்றும் தாமதிக்காமல் மின்வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். அதற்கான மின்வாரிய அலுவலகம் 94987-94987, திருப்பத்தூர் கோட்டம் 94458-55286, வாணியம்பாடி கோட்டம் 94458-55311, பள்ளிகொண்டா மின் கோட்டம் 94458-55589, குடியாத்தம் கோட்டம் 94458-55368 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.

மழை காரணமாக இடி, மின்னல் ஏற்படும்போது வெட்ட வெளியிலேயோ, மரத்தடியிலேயோ, மின்கம்பங்கள், மின்கம்பிகள் அடியில் தஞ்சம் அடைய வேண்டாம். அனைத்து வீடுகளுக்கும் நில எர்த் இணைப்பு அமைப்பதுடன், அதை குழந்தைகள், கால்நடைகள் தொடாத வகையில் பராமரிக்க வேண்டும்.

டிப்பர் லாரி, கனரக வாகனங் களை உயர் அழுத்தம், தாழ்வு அழுத்தம் மின்பாதை அருகில் நிறுத்தக்கூடாது. கேபிள் டி.வி. வயர்களை மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகாமையில் கொண்டு செல்லக்கூடாது.

மின்மாற்றி, மின்கம்பிகளில், மின்வாரிய ஊழியர்களை தவிர பொதுமக்கள் யாரும் ஏறக்கூடாது. விவசாய நிலங்களில் எக்காரணம் கொண்டு மின்வேலி அமைக்கக்கூடாது’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in