

கோவையில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை நேற்று தொடங்கியது.
கோவை ரயில் நிலையத்தில் இருந்து தினமும் மதியம் 2.10 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இரவு 7.40 மணிக்கு மதுரை சென்றடையும். மதுரையில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 2 மணிக்கு கோவை வந்தடையும்.
இதுதொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “இந்த ரயில்கள், போத்தனூர்,கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப் பேட்டை, மைவாடி சாலை, புஷ்பத்தூர், பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கொடைரோடு, வாடிப்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கோவை-பழனி இடையே ரூ.55, கோவை-மதுரை இடையே ரூ.90 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை ரயில் நிலைய கவுண்ட்டர்களில் மட்டுமின்றி, யுடிஎஸ் செயலியிலும் பெறலாம். செயலியை ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் செல்போன்களில், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பின்னர் செல்போன் எண், அடையாள அட்டை விவரங்களை சமர்ப்பித்து பிரத்யேக கணக்கை உருவாக்கிகொண்டு பயணச்சீட்டு பெறலாம். முன்பதிவில்லா ரயில் என்பதால் ஆன்லைனில் டிக்கெட் பெற இயலாது. முதல் நாளில் இந்த ரயிலில் 49 பேர் பயணித்தனர்” என்றனர்.
கோவை-பழநி இடையே நேற்று இயக்கப்பட்ட ரயில் பெட்டிகளில், ரயில் எண், வழித்தடம் அடங்கிய அறிவிப்பு பலகை இல்லாததால் பயணிகள் குழப்படைந்தனர்.
கட்டண உயர்வுக்கு கண்டனம்
அதேநேரத்தில், கோவை-பழநி இடையேயான பயண கட்டணத்தை ரூ.25-ல் இருந்து ரூ.55 ஆக உயர்த்தி பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் சுமையேற்றுவது கண்டிக்கத்தக்கது.
உடனடியாக இந்த கட்டண உயர்வை ரயில்வே நிர்வாகம் திரும்ப பெற்று, முந்தைய கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டும்” என்றார்.