அரகண்டநல்லூர் தரைப்பாலம் மேம்பாலமாக கட்ட நடவடிக்கை : அமைச்சர் பொன்முடி தகவல்

அரகண்டநல்லூர் தரைப்பாலம் மேம்பாலமாக கட்ட நடவடிக்கை :  அமைச்சர் பொன்முடி தகவல்
Updated on
1 min read

தொடர் மழையால் அத்திப்பாக்கம், திருக்கோவிலூரில் 2 வீடுகள்சேதமடைந்துள்ளன. இப்பகுதி களை அமைச்சர் பொன்முடி நேற்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர், “வீடு இடிந்தவர்களுக்கு மீண்டும் வீடு கட்டித் தரப்படும்.

திருக்கோவிலூர் சந்தைமேடு ஏரிக்கரை பகுதியில் உள்ள 21 இருளர் மற்றும் நரிகுறவர் இனகுடியிருப்பு மக்களின் கோரிக்கைகேட்டறியப்பட்டது. முக்கியகோரிக்கையான, ‘குடியிருப்புபட்டா தேவை’ கோரிக்கை ஏற்கப் பட்டது. அமேலும் சாதிச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட் டிருக்கும் கள்ளக்குறிச்சி, விழுப் புரம் மாவட்ட எல்லைப் பகுதியான அரகண்டநல்லூர் தரைப்பாலம் ஆய்வு செய்யப்பட்டது. இத் தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்ய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை, கோட்டக்குப்பம், முதலியார் சாவடி ஆகிய இடங்க ளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின் போது விழுப்புரம் ஆட்சியர் மோகன், கள்ளக்குறிச்சி ஆட்சியர் தர்,விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி,திட்ட இயக்குநர் மணி திருக்கோவிலூர் வருவாய் கோட் டாட்சியர் சாய்வர்தினி உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in