மதுரை மல்லிகைக்கு சிறப்பு அஞ்சல் உறை :

மதுரை மல்லிகைக்கு புவிசார் குறியீடு கிடைத்தமைக்காக இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்ட நிகழ்வில் பங்கேற்றோர். படம்: எஸ்.  எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை மல்லிகைக்கு புவிசார் குறியீடு கிடைத்தமைக்காக இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்ட நிகழ்வில் பங்கேற்றோர். படம்: எஸ். எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரை மல்லிகைக்கு புவிசார் குறியீடு கிடைத்தமைக்காக, இந்திய அஞ்சல் துறை மதுரை மண்டலம் சார்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடந்தது.

மதுரை மண்டல அஞ்சல் துறைத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். விழாவில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன், தென்மண்டல அஞ்சல் துறை இயக்குநர் கே.ரவீந்திரன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் ஜெகதீசன் பேசியதாவது: இதுவரை நாடு முழுவதும் 421 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த பொருட்களுக்குத்தான் அதிகபட்சமாக 43 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

மதுரையை பொறுத்தவரை காட்டன் சிந்தடிக் சேலை, மதுரை மல்லிகைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in