கடலூர் மாவட்டத்தில் - மீட்பு பணியில் காவல்துறையினர் :

கடலூர் மாவட்டத்தில் -  மீட்பு பணியில் காவல்துறையினர் :
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்துகாவல்துறையினர் அந்தந்த பகுதிகாவல் நிலையங்களில் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக பொக் லைன் இயந்திரம், மரம் அறுக்கும் இயந்திரம், கயிறு, மண்வெட்டி ஆகிய மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

சேத்தியாதோப்பு மெயின் ரோட்டில் தேங்கியிருந்த மழைநீரை சிறப்பு உதவி ஆய்வாளர்ஆரோக்கியதாஸ் தலைமையி லான போலீஸார் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர். நெய்வேலி வடகுத்து தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியிருந்த மழைநீரை காவல் ஆய்வாளர் ஷாகுல் அகமது தலைமையிலான போலீஸார் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர்.

அகரம் மற்றும் பொன்னால் லகரம் வடக்கு தெருவில் தேங்கியுள்ள மழைநீரை உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் தலைமையிலான போலீஸார் வெளி யேற்றினர்.

கடலூர் தாழங்குடா கிராமத்தில் உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீஸார் மழைநீரை வெளியேற்றினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in