கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை - மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் தேதி மாற்றம் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை -  மாற்றுத்திறனாளிகளுக்கான  மருத்துவ முகாம் தேதி மாற்றம் :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக நேற்று (9-ம் தேதி)முதல் 12-ம் தேதி வரை நடைபெறஇருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மத்திய அரசு நிறுவனத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிஉபகரணங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு நலத்திட்டங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நேற்று (9-ம் தேதி) முதல் 12-ம் தேதி வரை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது பெய்துவரும் தொடர் மழையால் இந்த முகாம் நடைபெறும் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 16-ம் தேதி மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 17-ம் தேதி சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 18-ம் தேதிகாவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 19-ம் தேதி ஓசூர் ஆர்.வி.அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலும், 23-ம் தேதி தளி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 24-ம் தேதி தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் முகாம்கள் நடைபெறுகிறது.

எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, அதற்கான மருத்துவ சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல்,மார்பளவு புகைப்படங்களுடன் முகாம் நடைபெறும் இடங்களில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in