போதையில் தகராறு: போலீஸ்காரர் பணியிடை நீக்கம் :

போதையில் தகராறு: போலீஸ்காரர் பணியிடை நீக்கம் :

Published on

கரூர் திருமாநிலையூரை சேர்ந்தவர் லோகநாதன்(30). சிந்தாமணிபட்டி காவல் நிலையத் தில் காவலராக பணியாற்றி வரும் இவர் கரூரில் நேற்று முன்தினம் குடிபோதையில் காரில் சாலை யில் செல்பவர்கள் மீது மோது வது போல தாறுமாறாக சென் றுள்ளார்.

இதனால் கரூர் ஒருங் கிணைந்த நீதிமன்றம் அருகே வாகனங்களில் சென்றவர்கள் அவரது காரை தடுத்து நிறுத்தி, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலறிந்த தாந்தோணிமலை போலீஸார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்க ளையும் லோகநாதன் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதையடுத்து அவரை தாந்தோ ணிமலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைர லானது.

இந்நிலையில், லோகநாதனை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி ப.சுந்தரவடிவேல் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in