சங்கராபுரத்தில் தொடர் மழை 500 ஏக்கர் மரவள்ளி, சின்ன வெங்காயம் சேதம் :

சங்கராபுரத்தில் தொடர் மழை  500 ஏக்கர் மரவள்ளி, சின்ன வெங்காயம் சேதம் :
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் மரவள்ளி, சின்ன வெங்காயம், மக்காச்சோளப் பயிர்கள் சுமார் 2,500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் சங்கராபுரத்தில் நேற்று 20 செ.மீட்டர் வரை மழை பெய்துள்ளது. இதனால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளதோடு, விளைநிலங்களும் மழைநீரில் மூழ்கின.

தொடர் மழை காரணமாக சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட செல்லம்பட்டு, கொசபாடி, அரசம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் அழுகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதையறிந்த சங்கராபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயசூரியன், வேளாண் அலுவலர்களுடன் அப்பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் சேதம் குறித்து கேட்டறிந்து, பயிர் சேத விவரங்களை உரிய கணக்கீடு செய்யுமாறு வேளாண்துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in