வெளிநாட்டு வேலை மோசடி: மதுரை தம்பதி மீது வழக்கு :

வெளிநாட்டு வேலை மோசடி: மதுரை தம்பதி மீது வழக்கு :
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3.50 லட்சம் பெற்று மோசடி செய்த தம்பதி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மதுரை அருகிலுள்ள காதக் கிணறு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (55). இவரது மனைவி ஆரோக்கிய மேரி (50). இருவரும் கோ.புதூரைச் சேர்ந்த பழனிராஜ் (34) என்பவரை அணுகி ஆஸ்திரேலியாவில் வேலை வாய்ப்பை பலருக்கு பெற்றுத்தருவதாகவும், ‘உங்களுக்கும் அங்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறோம்,’ என ஆசை வார்த்தை கூறினர்.

செல்வராஜ்- ஆரோக்கிய மேரி தம்பதியின் வார்த்தைகளை நம்பிய பழனிராஜ், 2017-ம் ஆண்டு ரூ.3.50 லட்சத்தை தம்பதியிடம் அய்யர் பங் களா பகுதியில் வைத்துக் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட பின் தம்பதி ஆஸ்திரேலியா அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. கொடுத்த பணத்தையும் அவர் கள் திரும்பித் தரவில்லை.

புகாரின்பேரில் செல்வராஜ்-ஆரோக்கிய மேரி மீது தல்லா குளம் போலீஸார் மோசடி வழக்குப்பதிந்து தேடி வரு கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in