

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி சுற்றுவட்டாரப்பகுதிகளில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனை அதிகரித்து வருவ தாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பால கிருஷ்ணனுக்கு தொடர்ந்து புகார் சென்றது. அவரது உத்தரவின் பேரில் கந்திலி காவல் துறையினர் காக்கங்கரை, குனிச்சி, மண்டலநாயனகுண்டா உள்ளிட்ட பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, குனிச்சி பகுதியைச் சேர்ந்த ரமணி (45) என்பவர் தனது வீட்டில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்து அவரது வீட்டில் இருந்து 36 மதுபாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், கந்திலி பகுதியைச் சேர்ந்த சரவணன் (47) என்பவரும் தனது வீட்டில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. அவரையும் காவல் துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து 24 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.