புவனகிரி அருகே ஊருக்குள் நுழைந்த முதலை :

புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் கிராமத்துக்குள் நுழைந்த முதலையை வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து பிடித்தனர்.
புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் கிராமத்துக்குள் நுழைந்த முதலையை வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து பிடித்தனர்.
Updated on
1 min read

புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் கிராமத் துக்குள் நுழைந்த முதலையை நள்ளிரவில் வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் பிடித்து குளத்தில் விட்டனர்.

புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு முதலை ஊருக்குள் நுழைந்து வேலியோரம் கிடந்துள்ளது. இதைப்பார்த்த அக்கிராம மக்கள் சிதம்பரம் வனத்துறை மற்றும் தீயணைப்புதுறை அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர்.

சிதம்பரம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வனவர் அஜிதா, வனக்காப்பாளர் சரளா, வனக்காவலர் புஷ்பராஜ் மற்றும் சிதம்பரம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பழனிசாமி, சிறப்பு நிலை அலுவலர்கள் நவநீத கண்ணன், சரத்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

4 அடி நீளமும் 70 கிலோ எடை கொண்ட முதலையை பிடித்தனர். பின்னர் வனத்துறையினர் முதலையை பாதுகாப்பாக கொண்டு சென்று சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குளத்தில் விட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in