‘நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம்’ :

‘நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம்’ :
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் பருவ மழை தீவிரமடைந்து வருவதால் கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு மற்றும் அடவிநயினார் நீர்த்தேக்கங்களில் உபரி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ள அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, பொதுமக்கள் நீர்நிலைகளில் குளிக்கவோ இறங்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்ல வேண்டாம்.

உதவிகளுக்கு 24 மணி நேரமும் இயங்கி வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04633-290548 -ல் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in