பனைமரம் வெட்டியதாக 3 பேர் கைது :

பனைமரம் வெட்டியதாக 3 பேர் கைது :
Updated on
1 min read

தமிழகத்தில் மாவட்டம்தோறும் பனை விதைகள் நடப்பட்டு பனைமரம் வளர்ப்புப்பணிகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பனை மரங்களை யாரும் வெட்டக்கூடாது என அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் நரசிங்கபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுதெங்கால் கிராமத்தில் சாலையோரம் இருந்த 15 பனைமரங்களை மர்ம நபர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெட்டியுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் தியாகராஜன், கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமார் மற்றும் காவல் துறையினர் மேட்டுதெங்கால் பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தி மரங்களை வெட்டியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

அதில், வடகால் பகுதியைச் சேர்ந்த தினகரன்(42), பால கிருஷ்ணன்(38), ஜான்பால்(44) ஆகிய 3 பேர் தான் சாலையோரம் இருந்த பனை மரங்களை வெட்டியது என்பது தெரியவந்தது.

இது குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் விஏஓ வசந்த்குமார் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தினகரன் உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in