

கடையநல்லூர் அருகே பண்பொழி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வேட்டை நாய்களுடன் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மேக்கரையைச் சேர்ந்த கண்ணன் (24), மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த தினேஷ் (19), ஆகாஷ் (19), அருண் (19) ஆகியோர் பிடிபட்டனர்.
வனத்துறையினர் அவர்களை கைது செய்து, தலா ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.1.20 லட்சம் அபராதம் விதித்தனர்.
புளியங்குடி, டி.என்.புதுக்குடி பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 5 பேர் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள், புன்னையாபுரத்தைச் சேர்ந்த திருமலைச்சாமி (20), ரஞ்சித்குமார் (23), வசந்தகுமார் (18), மனோகர் (23), திருப்பதி (28) என்பது தெரியவந்தது. இவர்கள் 5 பேரையும் கைது செய்து, இவர்களுக்கு தலா ரூ.40 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர்.