

கடையநல்லூரை சேர்ந்தவர் கணேசன். வீட்டு பிளான் மற்றும் வரைபட நகல் கேட்டு, கடையநல்லூர் நகராட்சிக்கு ரூ. 300 கட்டணமாக செலுத்தி விண்ணப்பித்தார். ஆனால், நகராட்சி நிர்வாகம் வரைபட நகலை அளிக்கவில்லை. இது குறித்து வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியும் எவ்வித பதிலையும் நகராட்சி நிர்வாகம் அளிக்கவில்லை.
திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றத்தில் கணேசன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரருக்கு நகராட்சி நிர்வாகம் 30 நாட்களுக்குள் வீட்டு பிளான் மற்றும் வரைபட நகலை கொடுக்க வேண்டும் என்றும், மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காகவும், வழக்கு செலவுக்காகவும் ரூ.8 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் 6.11.2017-ம் தேதி உத்தரவிட்டது. நுகர்வோர் நீதிமன்ற உத்தர வுக்கு எதிராக மாநில நுகர்வோர் ஆணையத் தில், நகராட்சி ஆணை யர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல் முறையீடு மனுவை விசாரித்த மாநில நுகர்வோர் ஆணையம், திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்துள்ளதுடன், மனுவை தள்ளுபடி செய்தது.