

மதுரை அழகர்கோவில் ரோடு காதக்கிணறை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (38). ஆட்டோ ஓட்டுநர். இவர் கடந்த 3-ம் தேதி மாலை நரசிங்கம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ஆட்டோவுடன் நின்றிருந்தார்.
அப்போது அங்கு 3 பேர் வந்து தகராறு செய்து தாக்கியதில் படுகாயமடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ஒத்தக்கடை காவல் ஆய் வாளர் ஆனந்த தாண்டவன் விசாரித்தபோது, டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் ஒத்தக்கடை கல் குவாரி பகு தியைச் சேர்ந்த 6 பேர் அவரை கொலை செய்தது தெரிய வந்தது.
சம்பவ இடத்தில் எஸ்பி பாஸ்கரன் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து தனிப்படையினர் மருதுபாண்டி(21), அஜித்(28), முத்துப்பாண்டி(26) ஆகி யோரைக் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வரு கின்றனர்.
சோழவந்தானைச் சேர்ந்தவர் அப்துல் ஜபார். இவரது சகோதாரர் கருப்புராஜா என்ற ராஜாமுகமது(35). இருவரும் தீபாவளியன்று வீட்டுக்கு அருகே பேசிக்கொண்டி ருந்தனர். அப்போது அங்கு வந்த ஜாகீர்பாட்சா(32) என்பவர் தகராறு செய்து ராஜாமுகமதுவை கத்தியால் குத்தினார். இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு உயிரிழந்தார். சோழவந்தான் போலீஸார் விசாரணை நடத்தி ஜாகீர் பாட்சாவைக் கைது செய்தனர்.