ஏரல் அருகே ஆற்றில் சடலம் மீட்பு :

ஏரல் அருகே ஆற்றில்  சடலம் மீட்பு :
Updated on
1 min read

ஏரல் அருகேயுள்ள சென்னல் மாநகரை சேர்ந்த வேலாயுதம் மகன் ராமச்சந்திரன்(40). இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் வாழவல்லான் தாமிரபரணி ஆறு தடுப்பணையில் குளித்து கொண்டிருந்தார். பலத்த மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தது. வெள்ள நீரில் ராமச்சந்திரன் அடித்துச் செல்லப்பட்டார்.

வைகுண்டம் தீயணைப்பு படையினர் நிலைய அலுவலர் இசக்கி தலைமையிலான வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேர தேடுதலுக்கு பிறகு, ராமச்சந்திரன் சடலத்தை மீட்டனர். ஏரல் காவல் ஆய்வாளர் மேரிஜெமிதா விசாரணை நடத்தி வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in