

நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் காலை முதலே சாரல் மழை மற்றும் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால், வாகனங்களில் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடியே வாகனஓட்டிகள் சென்றனர். கடும் குளிரால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அவதியடைந்தனர்.
மழை அளவு (மி.மீட்டரில்): கிண்ணக்கொரை 56, குன்னூர் 33, கீழ் கோத்தகிரி 31, கோடநாடு 30, அவலாஞ்சி 29, கெத்தை 26, அப்பர் பவானி 24, பர்லியாறு 24, கோத்தகிரி 23, பந்தலூர் 14, உதகை 11 மி.மீட்டர் மழை பதிவானது.