தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் 123 பேர் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி :

தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் 123 பேர் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி :
Updated on
1 min read

நீட் தேர்வில் தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் 123 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2021-22-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த 12.9.2021 அன்று நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இத்தேர்வில் நாடு முழுவதும் 15 லட்சம் பேரும், தமிழகத்தில் இருந்து 1 லட்சம் பேரும், பங்கேற்றனர். அவர்களில் தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் 478 பேரும் அடங்குவர்.

இத்தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமை மூலம் கடந்த 1-ம் தேதி வெளியிடப்பட்டது. தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வை எழுதிய மாணவ, மாணவியரின் 123 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in