

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் நேற்று முன் தினம் இரவு 36 மி.மீ மழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் மாலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்நிலையில், அன்று இரவு மாவட்டத்தின் சில பகுதிகளில் கனமழையும், இதர பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்ச அளவாக ஒகேனக்கல் பகுதியில் 36 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதுதவிர, அரூர் பகுதியில் 29 மி.மீ, பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 24.20 மி.மீ, பாலக்கோடு பகுதியில் 9.80 மி.மீ, பென்னாகரம் பகுதியில் 9 மி.மீ, தருமபுரி பகுதியில் 7 மி.மீ அளவுக்கு மழை பதிவானது. இதுதவிர, அதிகாலை தொடங்கி 10 மணி வரை அவ்வப்போது மிதமான தூறலுடன் கூடிய மழை பெய்தது.
மேலும், நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது.