கோயில் வாடகைதாரர்கள், குத்தகைதாரர்களுக்கு - கணினி மூலம் ரசீது வழங்கல் :

கோயில் வாடகைதாரர்கள், குத்தகைதாரர்களுக்கு  -  கணினி மூலம் ரசீது வழங்கல் :
Updated on
1 min read

தமிழ்நாடு முழுவதும் உள்ள திருக்கோயில்களில் ஓரே சீராக ரசீது வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

வருங்காலங்களில் அனைத்து கட்டண சீட்டுகளும் கணினி வழியாக மட்டுமே வழங்கப்பட வேண்டும். இதற்காக ஒருங்கிணைந்த கோயில் மேலாண்மை திட்டத்தின்கீழ் ஒவ்வொரு கோயில் வலைதளத்தின் மூலமாகவும், கோயிலில் உள்ள கவுன்ட்டரிலும் கணினி வழிகட்டணச் சீட்டு வழங்க தேவையான மென்பொருள் ‘நிக்’ என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இதனை பயன்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் கோயில்களில் மேற்கொள்ள வேண்டும் என்று அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில், நேற்று முதல் பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் உட்பட பல்வேறு திருக்கோயில்களில் வாடகைதாரர்களுக்கு கணினி வழி முறையில் வாடகை ரசீது வழங்கப்பட்டதாக, இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in