மதுரை மாநகராட்சியில் பழைய மென்பொருள் மூலம் - கட்டிட வரைப்பட அனுமதிக்கான காலக்கெடு நவ.30 வரை நீட்டிப்பு :

மதுரை மாநகராட்சியில் பழைய மென்பொருள் மூலம்  -  கட்டிட வரைப்பட அனுமதிக்கான காலக்கெடு நவ.30 வரை நீட்டிப்பு :
Updated on
1 min read

மதுரை மாநகராட்சியில் பழைய மென்பொருள் மூலம் கட்டிட வரைபட அனுமதி பெறும் காலக்கெடு, வரும் 30 -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மதுரை மாநகராட்சியில் மாநில அளவிலான UTIS மென்பொருள் மூலம் கட்டிட வரைபடத்தை பரிசீலனை செய்து அனுமதி வழங்கும் புதிய முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

பழைய மென்பொருள் SMART DCR-ன் மூலம் பதிவேற்றம் செய்து ஏற்கெனவே கட்டணம் செலுத்தி நிலுவையிலுள்ள கோப்புகளை பழைய மென்பொருளின் வாயிலாகவே அனுமதி பெற்றுக் கொள்ளும் வசதி இம்மாதம் 30-ம் தேதி வரை மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஏற்கெனவே விண்ணப்பித்து ஆவணங்களுக்காக திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் உள்ள விண்ணப்ப தாரர்கள் அனைவரும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பயன்பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in