சிவகங்கை மாவட்டத்தில் - பட்டா மாறுதல் கணினி திருத்த சிறப்பு முகாம் தொடக்கம் :

சிவகங்கை மாவட்டத்தில்  -  பட்டா மாறுதல் கணினி திருத்த சிறப்பு முகாம் தொடக்கம் :
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் பட்டா மாறுதல் மற்றும் கணினி திருத்த சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.

இம்முகாம் அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை வருவாய் கிராமங்கள் வாரியாக வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடக்கின்றன. திருப்பத்தூர் வட்டம் திருக்கோஷ்டியூர் வருவாய் கிராமத்தில் நடந்த முகாமை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

பிறகு அவர் பேசியதாவது: பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான பட்டா, கணினி திருத்தம் போன்றவற்றை உடனுக்குடன் நிறைவேற்றிடும் வகையில் அந்தந்த வருவாய் கிராமங்களிலேயே முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வட்டத்திலும் வாரத்துக்கு 2 வருவாய் கிராமங்களில் முகாம்கள் நடக்கும். இதில் வருவாய்த்துறை நலத்திட்டங்களுக்கும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம், என்றார்.

தொடர்ந்து முகாமில் விண்ணப்பித்த 5 பேருக்கு உடனடியாக பட்டா மாறுதல் ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். பிறகு திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த ஆட்சியர் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடம் கட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in