தனுஷ்கோடியில் மீனவர் கரைவலையில் சிக்கிய ஆமை : மீண்டும் கடலில் விடப்பட்டது

மீனவரின் கரைவலையில் சிக்கிய சித்தாமை மீண்டும் கடலில் விடப்பட்டது.
மீனவரின் கரைவலையில் சிக்கிய சித்தாமை மீண்டும் கடலில் விடப்பட்டது.
Updated on
1 min read

தனுஷ்கோடி கரை வலை மீனவர்களின் வலையில் சிக்கிய அரியவகை சித்தாமை மீண்டும் கடலில் விடப்பட்டது.

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடல் பகுதியில் கரைவலை மீன்பிடிப்பில் மீனவர்கள் நேற்று ஈடுபட்டிருந்தனர். மீனவர்கள் வலையை கரையில் இழுக்கும்போது அதில் மீன்களோடு சேர்ந்து அரிய வகை சித்தாமையும் வந்தது. உடனே கரை மீனவர்கள் ஆமையை பாது காப்பாக மீண்டும் கடலுக்குள் விட்டனர்.

ராமேசுவரம் வனத்துறையி னர் கூறியதாவது: கடலில் விடப்பட்டது சித்தாமை எனும் அரியவகை ஆமையாகும். தற்போது கடலில் விடப்பட்ட ஆமைக்கு 6 வயதிருக்கும். இதன் எடை 25 கிலோ. டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இவற்றின் இனப்பெருக்க காலம். அப்போது கடற்கரைக்கு முட்டைகளை இடுவதற்காக இவை வரும். மீன்பிடி வலைகளில் இதுபோன்ற அரிய வகை ஆமைகள் சிக்கும்போது அவற்றை உடனடியாக மீனவர்கள் கடலில் விட்டுவிட்டு அதுபற்றி வனத்துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in