மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் - 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு உதவி :

நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்களுக்கு இலவச சேலை வழங்குகிறார் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் வி.தீபா.
நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்களுக்கு இலவச சேலை வழங்குகிறார் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் வி.தீபா.
Updated on
1 min read

மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் என்டிஆர் வைகை அறக்கட்டளை சார்பில் நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்களுக்கு தீபாவளி சேலை மற்றும் இனிப்பு வழங்கும் விழா நடைபெற்றது.

மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், சார்பு நீதிபதியுமான வி.தீபா, நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்களுக்கு சேலைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், தங்களிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி செய்வதே பண்டிகைகளின் நோக்கம்.

உதவும் மனப்பான்மை வந்து விட்டால், போட்டி, பொறாமைக்கு இடமில்லாமல் போய்விடும். சிறு வயதில் இருந்தே உதவும் மனப்பான்மையை இளம் வயதினர் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். ஏழைகளுக்கு சட்ட உதவிகள் வழங்க சட்டப் பணிகள் ஆணைக்குழு தயாராக உள்ளது என்றார்.

சட்டப்பணிகள் ஆணைக்குழு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமார், அரசு வழக்கறிஞர் ஜெயக்குமார், என்டிஆர் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் முத்துபாலகெளதம், டிஎஸ்பி தேவசகாயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in