

சேலம்: சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வீரகனூரில் 63 மிமீ மழை பதிவானது.
குறிப்பாக கெங்கவல்லி, ஆத்தூர், தலைவாசல் வட்டாரங்களில் நள்ளிரவில், இடி, மின்னலுடன் தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. அதிகபட்சமாக வீரகனூரில் 63 மிமீ மழை பெய்தது. மேலும், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்: பெத்தநாயக்கன்பாளையம் 50, கெங்கவல்லி, தம்மம்பட்டியில் தலா 40, ஏற்காட்டில் 24.6, ஆத்தூரில் 24.2, கரியகோவிலில் 20, ஆனைமடுவில் 18, காடையாம்பட்டியில் 15, மேட்டூரில் 11.4, ஓமலூர், சங்ககிரியில் தலா 10, சேலத்தில் 5.6, எடப்பாடியில் 3.8 மிமீ மழை பதிவானது.
மாவட்டத்தில் நேற்றும் பகல் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால், தீபாவளிக்கு பொருட்கள் வாங்க கடை வீதிக்கு வந்த பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.