சக்திமசாலா நிறுவனம் சார்பில் : 136 பேருக்கு தீபாவளி புத்தாடை வழங்கல் :

சக்தி மசாலா நிறுவனம் மற்றும் ஈரோடு நடுநகர் அரிமா சங்கம் இணைந்து நடத்திய விழாவில், சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் பி.சி.துரைசாமி, நிர்வாக இயக்குநர் சாந்தி துரைசாமி ஆகியோர் பயனாளிகளுக்கு புத்தாடைகளை வழங்கினர்.
சக்தி மசாலா நிறுவனம் மற்றும் ஈரோடு நடுநகர் அரிமா சங்கம் இணைந்து நடத்திய விழாவில், சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் பி.சி.துரைசாமி, நிர்வாக இயக்குநர் சாந்தி துரைசாமி ஆகியோர் பயனாளிகளுக்கு புத்தாடைகளை வழங்கினர்.
Updated on
1 min read

ஈரோடு: தீபாவளிப் பண்டிகையையொட்டி, சக்தி மசாலா நிறுவனம் மற்றும் ஈரோடு நடுநகர் அரிமா சங்கம் இணைந்து முதியோர் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட136 பேருக்கு புத்தாடை வழங்கப்பட்டது.

சக்தி மசாலா நிறுவனம் மற்றும் ஈரோடு நடுநகர் அரிமா சங்கம் இணைந்து பசிப்பிணி போக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இத்திட்டத்தில், ஏழை, எளிய முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 136 நபர்களுக்கு தினசரி, அவர்களின் இல்லம் தேடிச் சென்று உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 136 பயனாளிகளுக்கு புத்தாடை வழங்கும் விழா ஈரோடு சூளையில் நடந்தது.

சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் பி.சி.துரைசாமி, நிர்வாக இயக்குநர் சாந்தி துரைசாமி ஆகியோர் புத்தாடைகளை வழங்கினர். நடுநகர் அரிமா சங்க பட்டயத் தலைவர் என்.முத்துசாமி, சங்கத் தலைவர் டி.வாசுதேவன், செயலாளர்கள் கே.கதிர்வேல், பி.வெங்கடாசலம், பொருளாளர் எம்.ஈஸ்வரமூர்த்தி, எஸ்.சிவக்குமார் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in