

சேலம்: மேட்டூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
மேட்டூர் அடுத்த கூராண்டிபுதூரைச் சேர்ந்தவர் ஆனந்தன் (28). லாரி ஓட்டுநரான இவர்அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் கவின்குமார் (20), சிவா (23) ஆகியோருடன் நேற்று முன்தினம் நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் கூராண்டிபுதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, பாவனியில் இருந்து வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், ஆனந்தன் உள்ளிட்ட மூவரும் தூக்கிவீசப்பட்டனர். இதில், ஆனந்தன், கவின்குமார் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சிவா படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற மேட்டூர் போலீஸார் காயமடைந்த சிவாவை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.