சிறந்த பெண் குழந்தைகளுக்கான மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம் :

சிறந்த பெண் குழந்தைகளுக்கான மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம்  :
Updated on
1 min read

சிறந்த பெண் குழந்தைகளுக்கான மாநில விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், வீரதீர செயல் புரிந்து வரும், 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அளவில் அரசு விருது வழங்கி வருகிறது. சிறந்த குழந்தைக்கு வரும் ஜனவரி 24-ம் தேதி, பாராட்டு பத்திரமும், ரூ.1 லட்சமும் வழங்கப்படவுள்ளது. தகுதியான, 18 வயதுக்குட்பட்டவர்கள் வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விருதுக்கான விண்ணப்பங்கள் தலைமையாசிரியர், சிஇஓ, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல் துறை, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் வாயிலாக உரிய முன் மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சமூக நல இயக்குநரகத்திற்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, அனைத்து தகுதிகள் பெற்ற ஒரு பெண் குழந்தை தேர்வு செய்யப்பட்டு மாநில விருது வழங்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in