சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் - வங்கி தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு அழைப்பு :

சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் -  வங்கி தேர்வுக்கான  இலவச பயிற்சிக்கு அழைப்பு :
Updated on
1 min read

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் சேஜ் எனும் பயிற்சி மையம் மத்திய, மாநில அரசுப் பணிகள் மற்றும் வங்கி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வங்கி பணிகளுக்கான தேர்வை எதிர்கொள்ள விரும்புபவர்களுக்காக 6 நாள் இலவச பயிற்சியை வரும் நவ.15 -ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.

வரும் டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் வங்கி தேர்வுக்காக, சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் (ஸ்ரீனிவாச ராமானுஜம் மையம்) வளாகங்களில் நடைபெறவிருக்கும் இந்த இலவச பயிற்சியில் கலந்துகொள்ளும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த நபர்களுக்கு மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் தகுதிவாய்ந்தவர்கள் தங்களது பெயர், வயது, பிறந்த தேதி, செல்போன் எண், முகவரி மற்றும் கல்வித் தகுதி ஆகிய விவரங்களை டீன், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறை, சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613401 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது பல்கலைக்கழக மின்னஞ்சல் முகவரிக்கு, வரும் 10-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என பல்கலைக் கழக பயற்சி மற்றும் வேலைவாய்ப்புத்துறை புலத்தலைவர் வெ.பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in